இனப்பிரச்சினைக்கு ஓர் தீர்வு

19-06-2006
மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,
ஜனாதிபதி
அலரி மாளிகை,

அன்புடையீர்,
இனப்பிரச்சினைக்கு ஓர் தீர்வு

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் எனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். சமாதானம் வீட்டுப்படி வரை வந்துள்ளது. ஆனால் வெற்றிகரமாக சமாதானத்தை விரைவில் ஏற்படுத்துவது தாங்கள் காட்டும் தைரியத்திலும் செயற்படும் வேகத்திலுமே தங்கியுள்ளது. நாளுக்கு நாள் அரசியல் நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டு வருவதால் சூழ்நிலைக்கேற்ப தாங்களும் தங்கள் நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. தங்களுக்கு எத்தகைய கட்டுப்பாடு இருப்பினும் எனது கடிதத்தை பொறுமையாக படித்து எனது ஆலோசனைகளை ஏற்று செயல்படும்படி கேட்டுக்கொள்கிறேன். இறைவனால் எமக்கு அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி சிங்கள, தமிழ, இஸ்லாமிய, வேறு இன மக்கள் அனைவருக்கும் மன நிம்மதியை பெற்றுத்தர தவறின் எமது மக்களை நாம் ஏமாற்றுவதாக கருதப்படும். இச் சந்தர்ப்பத்தை நாம் நழுவ விட்டால் எமது எதிர்கால சந்ததியினர் எம்மை சபிப்பர்.

இனப்பிரச்சினைத் தீர்விற்கு முன்னைய ஜனாதிபதி முன் வைத்த ஆலோசனைகள் வாபஸ் பெறப்பட்டு ஐந்து ஆண்டுகளின் பின்பு இனப்பிரச்சினை ஆரம்பிப்பதற்கு காரணமாக இருந்த சிங்களம் தனி அரச மொழிச்சட்டம் அமுலாக்கப்பட்டு 50 ஆண்டுகளின் பின்பு தாங்கள் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். முன்னைய ஜனாதிபதி மேன்மைதங்கிய சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முன்வைத்த தீர்வுத் திட்டம் பலரால் மிக உற்சாகமாக வரவேற்கப்பட்டது. அதுவே இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுத் திட்டங்களில் சிறந்ததென வர்ணிக்கப்பட்டும் ஒரு கட்டத்தில் இரு காரணங்களால் வாபஸ் பெற வேண்டி ஏற்பட்டது. முதல் காரணம் காலம் கடந்தமையால் மக்கள் உற்சாகம் இழந்தனர். இரண்டாவது காரணம் பல மாற்றங்கள் செய்யப்பட்டதால் அதனுடைய உருவத்தில் ஏற்பட்ட மாற்றமுமாகும். பண்டாரநாயக்கா-செல்வநாயகம் உடன்படிக்கை , டட்லி-செல்வநாயகம் உடன்படிக்கை ஆகியவற்றுக்கும் இதே கதியே ஏற்பட்டது.

இதே பிழையை நாம் மீண்டும் விடக்கூடாது. எமது அனுபவ ரீதியாக எந்த விடயத்திலும் காலதாமதம் பாரிய விளைவுகளையே ஏற்படுத்துவது நாம் கண்டறிந்த உண்மை. தாங்கள் பதவியேற்று ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. அடுத்து வரும் சில மாதங்களுக்குள் ஓர் தீர்வு காணத் தவறின் மக்களின் உற்சாகம் மடிந்து தீர்வுத் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுப்படும். அதன்பின் வழமைபோல் தங்களுக்கு தீர்வு காண்பது கஷ்டமானதாக இருக்கும். தயவு செய்து சர்வகட்சி மாநாட்டில் அதிக நம்பிக்கை வைக்காதீர்கள். கடந்த காலத்தைப் போல் அது மாறுபட்ட விளைவையே ஏற்படுத்தும். இனப்பிரச்சினைத் தீர்வு காண்பதற்கு மக்கள் தங்களுக்கு ஆணை தந்துள்ளனர். 50 வருடத்துக்கு மேற்பட்ட இப்பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய திறமையும், மன உறுதியும் தங்களிடம் உண்டு. கடந்த வாரம் ஓஸ்லோவிலும் விடுதலைப் புலிகள் தமது சுயரூபத்தை காட்டியுள்ளனர். ஒஸ்லோ செல்வதற்கு தந்திரமாக தங்கள் அரசினதும், நோர்வே அரசினதும் உதவியை பெற்று அங்கு சென்றபின் அரசுடன் பேச மறுத்து விட்டனர். விடுதலைப் புலிகளிடமிருந்தே ஆபத்தை எதிர்நோக்கும் ஸ்ரீலங்கா கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்பு சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த இவ்வளவு தூரம் பிரயாணம் செய்து ஒஸ்லோ செல்ல வேண்டிய தேவையில்லை. அண்மையில் விசேட தூதுவர் கௌரவ யன் அன்சன் பவுர் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டபோது இவ்விடயம் பற்றி பேசியிருக்கலாம். அவர்களுக்கு ஒஸ்லோவிலும் சுவிட்சர்லாந்திலும் சொந்த வேலை இருந்திருந்ததை இச் சம்பவம் வெளிப்படுத்தியது. இதைத் தவிர பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அவர்களுக்கு எதுவித அக்கறையும் கிடையாது. தந்திரோபாயங்களை பாவித்து காலம் கடத்தி தமது நிலைப்பாட்டை ஸ்தீரணப்படுத்தவே முயற்சிக்கின்றார்கள் என்பதையும், அவர்கள் எந்தத் தீர்வுக்கும் சம்மதிக்க மாட்டார்கள் என்பதையும் நான் தங்களுக்கு உறுதியாக கூற விரும்புகின்றேன்.

அவர்களுடைய சகல சட்டவிரோத செயல்கள் அத்தனைக்கும் போர்நிறுத்த உடன்படிக்கை சட்டவலுப் பெற உதவியது. ஸ்ரீலங்கா கண்காணிப்புக் குழுவினர், கௌரவ எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருக்குக்கூட உட்புக அனுமதி கிடைக்காத சட்டவிரோதமான அவர்களுடைய கட்டுப்பாட்டு பிரதேசங்கள் சட்டரீதியான அங்கீகாரம் பெற உதவியது. பெலியத்த, கிளிநொச்சி ஆகிய தொகுதிகளை பாராளுமன்றத்தில் 1970ம் ஆண்டு நீங்களும், நானும் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தோம். நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் அதிஷ்டவசமாக சுதந்திர பிரஜைகளாக வாழ்கின்றார்கள். ஆனால் கிளிநொச்சி மக்களோ விடுதலைப் புலிகளின் அடக்கு முறைகளுக்கு அஞ்சி அடிமைகள் போல் வாழ்கின்றார்கள். அவர்களுடைய ஜனநாயக உரிமைகள், அடிப்படை உரிமைகள்,மனித உரிமைகள் அத்தனையும் பறிக்கப்பட்டு, பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு எத்தகைய ஆபத்து ஏற்படினும் அவர்களை மீட்டெடுக்க வேண்டிய தார்மீகக் கடமை எனக்குண்டு. விடுதலைப் புலிகளின் இரும்புத் திரைக்குப் பின் தடுப்பு முகாம்கள், சித்திரவதை முகாம்கள், இருட்டறை கூடங்கள், பணம் பறித்தல், சிறுவர் சிறுமியரை யுத்தத்துக்கு அணிதிரட்டல் மட்டுமல்ல கொலைகளும் அங்கே நடக்கின்றன. ஆனால் துரதிஷ்டவசமாக என்னைத் தவிர வேறு யாருக்கும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழும் மக்களைப் பற்றி அக்கறை கிடையாது. மேலும் அவர்களுடைய சட்டவிரோத செயல்களுக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுத்தரக்கூடிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்துவதிலேயே அனைவரும் அக்கறையாக உள்ளனர். அவ்வாறு துன்பப்படும் மக்களை விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். இந் நாட்டு ஜனாதிபதி என்ற வகையில் அது தங்களுடைய கடமையாகும்.

விடுதலைப் புலிகளின் தலைவர்களும் ஒரு தனி வாழ்க்கை முறைக்கு தம்மை பழக்கிக்கொண்டனர். அவர்களில் ஒவ்வொருவரும் தலைவர்கள். அவர்கள் தற்போது செயற்படும் மிக உயர்ந்த பீடத்திலிருந்து இறங்கி வருவது அவர்களுக்கு கஷ்டமே. திரு சு.ப. தமிழ்ச்செல்வனின் புதிய கண்டுபிடிப்பு யாதெனில் திரு. பாலித்த கொஹேன அமைச்சரவை அந்தஸ்த்து பெறாமையால் அவருக்கு தங்களுடன் பேச தகுதி இல்லை என்பதாகும். அவர்கள் தம்மை பற்றி மிக உயர்வாக சிந்திக்கின்றார்கள். அவர்கள் தமது கடுமையான கட்டுப்பாட்டுக்குள் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களை பற்றி கடுகளவும் அக்கறைகொள்வதில்லை. தற்போது தங்களுக்குள்ள ஒரேயொரு வழி சர்வதேச சமூகத்தின் கணிப்புக்கமைய சிறுபான்மை இன மக்களுக்கு ஏற்புடையதொரு தீர்வு திட்டத்தை முன்வைப்பதே. நான் தங்களுக்கு 07-05-2006 இல் எழுதியனுப்பிய கடிதத்தின் ஒரு பகுதியை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். “ ஐரோப்பிய யூனியன் விடுதலைப் புலிகள் மீது தமக்குள்ள வெறுப்புணர்வை பிரயாணத்தடை விதிப்பதன் மூலம் வெளிப்படுத்தியதோடு விடுதலைப் புலிகளின் சகல நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் தாம் பார்த்துக்கொண்டிருக்க தயாராக இல்லை என சமிக்ஞையும் காட்டியுள்ளது”. நான் இவ்வாறு கூறி ஒரு மாதத்துக்குள் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது முழுத்தடை விதித்து விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்ல என்றும் கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிள்ளைகளை யுத்தத்துக்கு சேர்த்துக் கொள்வதையும், மக்களை கொல்வதையும் நிறுத்துமாறு மீண்டும் மீண்டும் பலதடவை வற்புறுத்தி கேட்டபோது அதை செய்திருந்தால் இந்த தடை விதிக்கப்பட்டிருக்க மாட்டாது. விடுதலைப்புலிகளின் நடத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விடும் சவாலாக தோன்றியது. அதே கடிதத்தில்; “விடுதலைப் புலிகளுக்கு விடுத்த சமிக்ஞையை அரசு தனக்கும் விடுக்கப்பட்டதாக ஏற்று தமது கணிப்பின்படி தமிழ் மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சிபாரிசு செய்யக்கூடிய ஓர் நியாயமான தீர்வை முன்வைக்காத பட்சத்தில் விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய யூனியன் கடுமையாக இருக்கப் போவதில்லை” என்று கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தேன்.

ஒஸ்லோ ஒப்பந்தத்துக்கு அமைய ஐக்கிய இலங்கைக்குள் சர்வதேச சமூகத்துக்கு திருப்தி தரக்கூடிய ஒரு தீர்வை அரசு முன்வைக்கும் என்ற நம்பிக்கையிலேயே விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் முற்றாக தடை செய்தது. ஒஸ்லோ ஒப்பந்த அடிப்படையில் ஒரு தீர்வு திட்டத்தை அரசு முன்வைக்க தயக்கம் காட்டும் பட்சத்தில் மிகவும் சிரமப்பட்டு தமது பிரதிநிதிகள் மூலம் இலங்கைக்கு சமாதானத்தை கொண்டுவர வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் சர்வதேச சமூகம்; எம்மை நாணயமற்றவர்களாக நோக்கும். ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி உட்பட இராஜதந்திரிகள் எடுத்த சிரமத்தை நாம் மறந்துவிட முடியாது.

விடுதலைப் புலிகளின் அகங்கார போக்கினால் தங்கள் அரசு ஒருதலைபட்சமாக செயற்பட்டு தமிழ், இஸ்லாமிய மக்களுக்கு ஏற்புடையதான ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டிய காலகட்டம் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. சொந்த இஷ்டப்படி நடக்க முடியாமல் தாங்கள் இருப்பது நான் அறியாததல்ல. ஆனால் கடந்த சில மாதங்களுக்குள், ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இருந்த நிலையுடன் ஒப்பிடும் பொழுது, அரசியல் சூழ்நிலையில் பெருமளவு மாற்றங்கள ஏற்பட்டுள்ளது. ஆகவே தங்களுடைய கைகள் கட்டுப்பட்ட நிலைமை நீடிக்கக்கூடாது. மனசாட்சியின் அடிப்படையில் சுயமாக சிந்தித்து செயற்பட வேண்டிய காலகட்டம் இது. தங்களுடைய கொள்கையில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாது என்ற எனது கூற்றை நிரூபிக்க என்னிடம் பல ஆதாரங்கள் உண்டு. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சில படங்கள் பார்ப்பவர்களின் உள்ளத்தை உருகக்கூடியவை. நாட்டின் ஏதோவொரு பகுதியில் இந்த காட்சி தினமும் காணக்கூடியதாக உள்ளது. இந்த அப்பாவி குழந்தைகள் என்ன குற்றம் செய்தார்கள்? இவ் ஏழை பெண்கள் எத்தகைய தீங்கை யாருக்கேனும்; விளைவித்திருக்க முடியும்? இந்த ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் ஏன் இத்தகைய கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். தம் உறவுகளின் பிரிவை தாங்க முடியாது பெண்கள் மார்பில் அடித்து அழுது புலம்பும் காட்சிகள் தாங்கமுடியாதவை. நல்ல பௌத்த மதத்தவர்கள், கிறீஸ்த்தவர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள், மற்றும் பிற மதத்தவர்கள் ஆகிய நாம் அனைவரும் இச் செயல்களில் ஈடுபடுபவர்களை வெறுத்து ஒதுக்கி மனிதாபிமானத்தின் விரோதிகள் என கண்டிக்க வேண்டும். இந்த குற்றவாளிகளை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த உதவுமாறு தாங்கள் மக்களை வேண்ட வேண்டும். இத்தகைய கொலைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க தாங்கள் எடுக்கும் எந்த முயற்சியையும் மக்கள் பொறுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எமது பிரச்சினை ஒவ்வொருவரின் குடும்பத்திலும் இத்தகைய சோக சம்பவம் ஏற்படும் வரைக்கும் பொறுத்திருக்காது பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் அவசியத்தை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இத்தனை ஆண்டுகள் நடைபெற்றவையும் தினமும் எமது நாட்டில் நடைபெறும் சம்பவங்களும் தாமதமின்றி எமது பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை உணர போதுமானது. நாட்டில் இரத்தம் பெருக்கெடுத்து ஓடுகின்ற வேளை சிறு சிறு அரசியல் இலாபத்தை தேடி நாம் அலையக்கூடாது. ஆகவே தயவு செய்து இணைத்தலைமை நாடுகளோ அல்லது சமஷ்டி ஆட்சி முறையில் வெற்றிகண்ட நாடுகளின் பிரதிநிதிகளோ அங்கீகரிக்கும் ஓர் நியாயமான தீர்வை தயாரித்து விடுதலைப் புலிகளின் அங்கீகாரத்துக்கு வைக்க வேண்டும். விடுதலைப் புலிகள் எதுவித நொண்டிச்சாட்டும் கூறாமல் இருப்பதற்காகவே இத்தகைய ஆலோசனையை நான் வழங்குகின்றேன். அவ்வாறானவொரு தீர்வை விடுதலைப் புலிகள் ஏற்பார்களேயானால் ஏதாவது ஒரு நிர்வாக ஒழுங்குகள் ஏற்படும் பட்சத்தில் ஏனைய தமிழ் கட்சிகள், புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் ஒன்ற ஒரேயொரு நிபந்தனையுடன், கூடுதலான பிரதிநிதித்துவத்தை விடுதலைப் புலிகளுக்கு வழங்குமாறு சம்மதிக்க வைக்க முடியும்.

இத்தகைய தீர்வுத்திட்டத்தை விடுதலைப் புலிகள் நிராகரிக்கும் பட்சத்தில் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து தடைகள் உட்பட பல்வேறு வழிவகைகளை கையாண்டு புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அரசால் முன்வைக்கப்படும் ஆலோசனை ஒஸ்லோ ஒப்பந்தத்துக்கு உட்பட்டதாக அமைந்திருப்பின் புலிகள் அத் திட்டத்தை நிராகரிப்பதை நியாயப்படுத்த முடியாது. நாட்டுப் பிரிவினையை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் இந்தியா கூறி வருகிறது. இக்கூற்று இந்தியாவோடு சம்பந்தப்பட்டதாக இருப்பினும் 28 மைல் நீள பாக்கு நீரிணை இந்தியாவிலிருந்து இலங்கையை பிரிப்பதால் அந்தக் கூற்று இலங்கைக்கும் பொருந்தும். இந்தியாவின் முக்கிய பிரச்சினை அதன் இறைமையும், உருக்குலையாத் தன்மையுமே. இந்தியா முற்றுமுழுதாக பிரிவினையையும் பயங்கரவாதத்தையும் எதிர்ப்பது எமக்காகவல்ல. இருப்பினும் எம் நாட்டில் சமஷ்டி பிரிவினைக்கு வழிகோலும் என்று கருதுகின்றவர்களுக்கு இந்தியாவின் இந் நிலைப்பாடு அப் பீதியை போக்கும். எக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் கடந்த காலத்திலும் சரி எதிர்காலத்திலும் சரி இந் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது. “சமஷ்டி”, “ஒற்றையாட்சி” ஆகிய இரு வார்த்தைகளை வெறுப்பவர்களுக்கு இந்திய ஆட்சி முறை மிகவும் பொருந்தும். ஏனெனில் இந்திய அரசியல் சட்டம் சமஷ்டி அடிப்படையிலோ, ஒற்றையாட்சி அடிப்படையிலோ உருவாக்கப்பட்டதல்ல. நாம் வேற்றுமையில் ஒற்றுமையை காண்கின்றோம் என்று பெருமையாக இந்தியர்கள் கூறிக்கொள்வார்கள். இந்தியாவிடமிருந்து இலங்கையர்களாகிய நாம் பல விடயங்களை கற்கக்கூடியதாகவுள்ளது. பெரும்பான்மையான இந்துக்களை கொண்ட உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாகிய இந்தியாவின் ஜனாதிபதி ஒர் இஸ்லாமியர். அத்தோடு இந்திய சனத்தொகையின் இரண்டு வீத மக்களைக் கொண்ட சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக பதவி வகிக்கின்றார். இப் பதவிகளை வகிக்கும் இரு பெரியாரும் பொது மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர்களாக, மதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். ஓர் கத்தோலிக்க பிற நாட்டவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆளும் கட்சியாகிய ஐக்கிய முற்போக்கு கூட்டமைப்பின் தலைவியாகவும் செயற்படும் இவர் நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றவர்.

இந்திய ஆட்சி முறையை பின்பற்றுவது சம்பந்தமாக உள்ளுரிலும் வெளிநாட்டு இலங்கையர்கள் பலருடனும் பேசியிருக்கிறேன். எனது பிரேரணையை பெருமளவில் ஆதரிக்கின்றனர். எமது கலை கலாச்சாரம் மொழி முக்கியமான இரு மதங்கள் இந்தியாவிலிருந்து வந்தவை என உணர்கின்றனர். எமது மூதாதையர்கள் இந்தியரே. எம் இரு நாட்டுக்கும் இடையில் பல விடயங்களில் ஒற்றுமை இருப்பதால் இந்திய முறையிலான அரசியல் சாசனம் எமது பிரச்சினை தீர்வுக்கு பெருமளவு உதவும். இந்திய பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிராணாப் முக்கர்ஜி அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து அவர் சிங்கப்பூரில் அசோசியேட்டட் பிரஸ் நிருபருக்கு தெரிவித்த கருத்து எனக்கு ஏற்புடையதல்ல. அவருடைய கூற்று, “ஒரே இன மக்கள் இரு நாட்டிலும் இருப்பதால் எமது தீவிர பங்களிப்பு சமாதான முயற்சி தீர்வுக்கு உதவுவதற்கு பதிலாக குழப்பத்தையே உண்டு பண்ணும். ஆனால் நாம் சமாதான முயற்சியை முற்றுமுழுதாக ஆதரிக்கிறோம் என்பதே. தமிழ் நாடு சட்டசபை தேர்தல் அண்மையில் நடைபெற்றது. அதற்கு முன்பு கௌரவ அமைச்சரின் கூற்று பொருத்தமாக இருந்திருக்கலாம்.ஆனால் இன்று தமிழ் நாட்டில் அரசியலில் ஏற்பட்ட மாற்றம் நிலைமையை முற்றுமுழுதாக மாற்றிவிட்டது. எனது கருத்துப்படி நீங்களும் அதை ஏற்றுக்கொள்வீர்கள் என நான் நினைக்கின்றேன். நம் இரு நாடுகளிலும் ஏககாலத்தில் நடந்த இரு அபூர்வ சம்பவங்கள் இரு அரசுகளும் இனப்பிரச்சினையை பேசித் தீர்க்க சுமூகமான ச+ழ்நிலையை உருவாக்கியுள்ளன. இரு சம்பவங்களில் ஒன்று ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசில் தி.மு.க முக்கிய பங்கு வகிப்பதும் தமிழ் நாடு ஆட்சியை காங்கிரஸ் கட்சியின் உதவியுடன் தி.மு.க கைப்பற்றியதுமே. இது ஓர் அபூர்வ சம்பவம் மட்டுமல்ல இச் சந்தர்ப்பத்தில் பொருத்தமானதும் கூட. அடுத்த சம்பவம் ஆளும் கட்சியை சார்ந்த தாங்கள் ஜனாதிபதி பதவியை வகிப்பதே. இந்த சூழ்நிலையில் தமிழ் நாட்டு அரசுடன் நட்பு கொண்டுள்ள மத்திய அரசின் நட்பு இலங்கைக்கு இருப்பதால் இப்பிரச்சினை இன்று தீர்க்கப்படா விட்டால் என்றும் தீர்க்கப்படமாட்டாது.

இக்காரணத்தினாலேயே இந்திய முறையிலான தீர்வுத்திட்டத்தையே எம் இனப்பிரச்சினை தீர்வுக்கு முன் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அது இலங்கை தமிழர்களுக்கு ஏற்புடையதாக இருப்பதோடு நான் பல பிரமுகர்கள் கட்சித் தலைவர்கள் சமய பெரியார்கள் இன்னும் பலருடன் கலந்துரையாடி கண்டு கொண்டது எனது ஆலோசனைக்கு பெருமளவு ஆதரவு சிங்கள, முஸ்லீம் மக்களிடம் உள்ளது என்பதுவே. நாட்டுப்பிரிவினைக்கு அனைவரும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவிலுள்ள 28 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுள் தமிழ் நாடு மாநிலமே இலங்கைத் தமிழர்களில் பெரும் அக்கறை காட்டுகின்றது. காரணம் அவர்களும் தமிழர்களே. இந்திய முறையிலான தீர்வை தமிழ் நாடு அரசு வரவேற்பதோடு தமிழ்நாட்டு அரசியல் வாதிகளாகிய திருவாளர்கள் வை.கோ, நெடுமாறன், திருமாவளவன், போன்ற, நம் நாட்டு நிலைமைகளையும் முற்று முழுதாக புரியாத இவர்களுக்கும் திருப்தியளிக்கும். அவர்கள் தமது மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களை விட கூடுதலான அதிகாரத்தை இலங்கை மாநிலங்களுக்கு வழங்குமாறு கேட்க மாட்டார்கள்.

மிகத் தயக்கத்துடன் நான் தங்களுக்குக் கூறுவது என்னவெனில் கடந்த 50 ஆண்டு காலமாக பல்வேறு பிரச்சினைகள் மத்தியில் வாழ்ந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் சகல ஜனநாயக அடிப்படை உரிமைகள், மனித உரிமைகளும் மீறப்பட்டு, பல ஆண்டு காலமாக பிரிவினைக்காக போராடிய தமிழ் மக்கள் 50 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிவரும் ஒற்றையாட்சியின் கீழ் இதுவரை காணாத தீர்வை இனி காணலாம் என்று எதிர்பார்க்க மாட்டார்கள். அரசின் தீர்வு எப்படி இருக்குமோ எவ்வாறு அமையுமோ என்ற சந்தேகத்தினாலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை நேரடியாக எதிர்க்கத் தயங்குகின்றார்கள். அவர்கள் தமது தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடவும், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணவும் தயாராக உள்ளனர். ஆனால் அத்தகைய தீர்வு ஓர் சமஷ்டி அடிப்படையிலான தீர்வாக அமைய வேண்டும் என்பதே அவர்களுடைய உறுதியான நிலைப்பாடாகும். விட்டுக்கொடுப்பு அடிப்படையில் ஓர் இணக்கப்பாட்டுக்கு வருவதற்காக தமிழ் மக்கள் இந்திய அரசியல் அமைப்பை ஒத்த, சிங்கள, இஸ்லாமிய மக்களுக்கும் ஏற்புடையதான தீர்வை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வர். தினம் 1500 இற்கு மேற்பட்ட இலங்கையர்கள் இந்தியாவுக்கு விஜயம்செய்து தமிழ் நாட்டில் சுதந்திரமாக நடமாடி வருகின்றவர்கள் தமது சொந்த நாட்டிலேயே வேலை முடிந்து வீட்டுக்கு பாதுகாப்பாக திரும்புவோமோ என்ற ஐயத்துடன் வாழும் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்கிறார்கள்.

இறுதியாக பல ஆண்டுகள் அரசியலில் ஈடுபாடு இருந்தமையால் அதாவது தனி சிங்கள மொழிச்சட்டம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 50 ஆண்டு காலத்தில் தமிழர்கள் எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தார்கள் என்பதை எங்களில் சிலருக்கு மட்டுமே தெரியும். பண்டா –செல்வா ஒப்பந்தம் காலந்தொட்டு இன்றுவரை தமிழ் மக்களை பொறுத்தவரையில் சோகம் நிறைந்த வரலாறே. 50 ஆண்டுகளில் மாறி மாறி ஆட்சி நடத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரு பெரும் கட்சிகள் இனப்பிரச்சினை தீர்விற்கு சமஷ்டி முறையை முன்வைத்துள்ளனர். ஐ.தே.கட்சி கடந்த ஜனாதிபதி தேர்தல் நேரத்திலும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கடந்த கட்சியின் வருடாந்த மாநாட்டிலும் சமஷ்டி ஆட்சி முறையை தீர்வாக முன்வைத்தன. ஜனாதிபதி தேர்தல் உட்பட நீண்டகாலமாக இடதுசாரி கட்சிகள் சமஷ்டி ஆட்சி முறையையே தீர்வாக முன்வைத்து வந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் மக்களுடைய ஜனநாயக உரிமையாகிய வாக்குரிமையை சுதந்திரமாக அளிக்க புலிகள் மூன்று தடவை இடையூறு செய்தனர். ஐக்கிய தேசிய கட்சிக்கு விழுந்த வாக்குகள் தங்களுக்கு எதிராக விழுந்த வாக்குகள் அல்ல என்று தாங்கள் கூறியதை நான் அறிவேன். இவையனைத்தையும் ஒன்று சேர்த்து பார்ப்பீர்களேயானால் இனப்பிரச்சினைக்கு தங்களுடைய தீர்வு இந்திய முறையை ஒத்ததாகவே அமையும். அது சமஷ்டி, ஒற்றையாட்சி ஆகிய முறைகளை எதிர்ப்பவர்களுக்கும் திருப்தியளிக்கும். இலங்கையிலும், இந்தியாவிலும் உள்ள தமிழர்கள் இதனை வரவேற்பார்கள். இத் தீர்வு இந்திய அரசுக்கு திருப்தியளிக்ககூடியதாகையால் சமாதான முயற்சியில் இந்திய அரசை முற்றுமுழுதாக ஈடுபட வைக்க முடியும். எல்லாவற்றுக்கு மேலாக நியாயமான ஓர் தீர்வென ஏற்கப்பட்டு அமுல்படுத்தும் வேளையில் நம் நாட்டு மக்கள் அனைவரும் சமாதானமாகவும்,மகிழ்ச்சியாகவும் வாழ்வர். அப்படியும் புலிகள் இத்தீர்வை எதிர்ப்பார்களேயானால் அவர்கள் மக்களால் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

நன்றி



வீ. ஆனந்தசங்கரி,
தலைவர் - த.வி.கூ

A SOLUTION TO THE ETHNIC PROBLEM

19-06-2006
His Excellency Mahinda Rajapaksa,
President of Sri Lanka,
Temple Trees
Colombo.

Your Excellency,

A SOLUTION TO THE ETHNIC PROBLEM

Permit me to write to you once again reiterating my stand on the ethnic issue. I am firmly of the view that peace is at our doorstep and the success in bringing Peace soon depends on the courage you display and the swiftness with which you act. The political scenario is changing everyday and we have to adjust to the changing circumstances. I strongly urge you to have the patience to read my suggestions and act accordingly, irrespective of whatever constraints you may have. We will be disappointing our people if we do not make use of the opportunities made availabe to us by the grace of God, to bring relief to our people, whether they are Sinhalese, Tamils, Muslims or any other ethnic group. Let not the future generation curse us for missing this opportunity.

You have become the President of Sri Lanka five years after the draft proposal of your predecessor was withdrawn and fifty years after the passing of the “Sinhala as the only official language Act”, with which the ethnic problem also started. The proposal of Her Excellency Chandrika Bandaranayake Kumarathunge submitted after her assumptiom of office as President, was welcomed with great enthusiasim by many. It was considered as the best of all so far offered, but it had to be withdrawn at one stage for two reasons, the first being the People started losing interest due to prolonged delay in giving it legal status and the other being that the proposal got diluted over a period of time during which the proposal lost its original form. The Bandaranayake-Chelvanayagam Pact and the Dudly –Chelvanayagam Pact also met with the same fate for the same reasons.

Let us not make the same mistake again. Through experience we have found that delayed action in any matter has always proved detrimental. Six months had passed since you became the President. If a solution is not found within the next few months, the enthusiasim of the people will gradually die and oppositition to any proposal will slowly gain momentum. Then as usual it will become difficult for you to find a solution. We have had a number of All Party Conferences since 1983 without achieving anything. Please do not have much faith in the APC since it is sure to turn out to be counter productive as in the past.

The People had given a mandate to you to solve the ethnic problem. I do not doubt your will power and your capacity to solve the problem which is now over fifty years old. The LTTE had shown its true colours very many times and lately at Oslo last week. Having tactfully obtained the help of your Government and that of the Norwegian’s to reach Oslo Mr. S.P. Thamilchelvan decided not to talk to the Government. There was absolutely no need for anyone to go to Oslo, all the way, only to discuss the security arrangements for the Sri Lanka Monitoring Mission, which is facing grave risk only from the LTTE and not from the Government Forces. However this matter could have been discussed in Killinochchi when the special envoy Hon. Jan Hanssen Bauer visited Kilinochchi recently. It is obvious that they had their own programme in Oslo and in Switzerland. Apart from that they have no interest in finding a solution. I assure you that they will not agree for any solution, but are only trying to stabilise themselves by adopting various delaying tactics.

The CFA had enabled them to gain legitimacy for all their illegal activities. The areas they had under their control illegally have now been legitimised, with no access to those areas for anybody including the SLMM and Hon.Erick Solheim. You and I entered Parliament in 1970 representing the Beliatta and the Killinochchi electorates respectively. You are lucky that your people are free citizens while the people whom I represented are living like slaves under the subjugation of the LTTE having been deprived of all their democratic and fundemental rights and with serious violations of Human Rights. I have a moral duty to have them liberated whatever risk I may face. There are behind the LTTE’s “Iron curtain” detention camps, torture camps, dark room chambers, extortions, conscriptions and even killings but unfortunately no one except me bothers about the people in the LTTE held areas. Every one is bothered only in bringing them to the negotiating table which will only help them to gain legitimacy to some more of their illegal acts. It is high time you liberate them from the iron clutches of the LTTE cadre. As the President of this country it is your bounden duty to do so.

The LTTE leaders and their cadre are used to a way of life. Each one is a leader. It will be very difficult for them to climb down from the high pedestal from where they are now operating. The latest reason discovered by Mr. Thamilchelvan for refusing to meet Mr. Palitha Kohana is that he is not of Cabinet rank. They think no end of themselves. They are not at all concerned about the sufferings of the People whom they have under their strict control. The only option you now have is to submit a reasonable proposal that should be acceptable to the minorities according to the assessment of the International Community.

It may be relevant if I quote from a letter dated 07.05.2006 sent by me addressed to you wherein I had said, “The European Union has in one way shown its resentment to the LTTE by imposing a travel ban on them and thereby given a signal that they are not going to tolerate their activities for ever. Within a month of my saying this EU has now imposed a total ban on them, and has also refused to recognize them as the sole representatives of the Tamil people. This ban could have been avoided if only the LTTE had paid attention to the repeated requests of the countries of the EU to stop conscription and killing people. The conduct of the LTTE appeared as a challenge to the countries of the EU. In the same letter I had also said “It is also equally a signal to the Government of Sri Lanka that unless the Government comes forward with a proposal, reasonable enough in their assessment, as one that could be recommended by them to the Tamil People or to the LTTE, they are not going to tighten the screws on them.

The EU had now imposed a total ban on the LTTE with the expectation that the Government of Sri Lanka also will fulfill its obligation to the satisfaction of the International Community, based on the Oslo Agreement within a United Sri Lanka. The Government which is committed to find a solution under the Oslo Agreement, if shows reluctance to do so, will certainly lose its credibility in its relationship with the International Community, that is toiling hard through their representatives to bring back Peace to Sri Lanka. We cannot forget the untiring efforts taken by the Diplomatic Community, including the Japanese Special Envoy H.E. Yasushi Akashi in this regard.

A situation is now fast developing, due to the LTTE’s arrogant attitude, for your Government to act unilaterally by putting forward a reasonable proposal, acceptable to the Tamils and Muslims. I am not unaware of the constraints you have to act arbitrarily. But since the entire scenario has changed during the past few months, in comparison to the pre-election period, I am convinced that your hands should not remain tied. This is the time you should be free to take independent decisions and act, guided by your own conscience. I can provide you with enough material to substatiate my claim that a variation in your policy at this juncture is indispensable. The annexed photographs will melt the hearts of everyone who sees them. These scenes are re-enacted almost everyday in some part of our country. What crimes did these poor innocent kids commit and what harm these poor women could have caused to any body?

Why are these men women and children killed in this brutal mannar. It is unbearable to see women beating their breasts weeping and wailing, mouring the deaths of their dear once. As good Budhists, Chirstians, Hindus, Muslims and people of other faiths we have a moral duty to spurn these men and condemn them as enemies of humanity. You must request the people to go all out to identify these criminals to be arrested and dealt with under the law. The people must be told to bear with you for whatever remedial measures you take to put a stop to these killings. Everyone in this country should be told that we can’t wait till some disaster falls on each family for them to realise the urgency and the need to solve our problem. What has happened all these years and what is happening in our country every day is more than enough for everyone to realize the urgency to find a solution without delay. When the country is bleeding profusely we can’t take advantage of the situation for political gains. Hence please come out with a proposal assessed as reasonable and acceptable by either the co-chairs or a team of experts nominated by a few countries where Federalism has thrived and offer it to the LTTE for their acceptance. I am suggesting this to avoid any lame excuse the LTTE my find. If the LTTE accepts the proposals, all the other Tamil parties can be persuaded to agree to give to the LTTE majority representation in any administrative set up and make it conditional for them to surrender their arms. If they require security the Government can provide the same.

If the LTTE rejects such a proposal the only option the International Community has is to get together and tame them by various ways, including imposition of strong sanction and such other steps necessary to pressurize them. If your proposal confines to the Oslo Agreement to which the Government is committed, the LTTE cannot justify their rejection. The Indian Government too had very clearly and firmly said that it will go all out to prevent division of the country and also that it will deal firmly with terrorism. Although this remark is made in relation to India, it equally applies to Sri lanka also because only 28 miles of the Palk-strait separate Sri Lanka from India
India’s main concerns are its sovereignty and integrity. India is totally opposed to seperation and terrorism, more in their own interest than ours. However we can take it as an overall guarantee to alley the fears of some Sri Lankans who think that a Federal solution will lead to separation. India’s stand on these matters had never changed which ever party came to power, and will not change in the future as well. The main reason, for my continued agitation for a solution based on the Indian model, is that it satisfies those who are opposed to the Federal and Unitary type of constitution. The Indian one is neither Federal nor Unitary and the Indians take pride in saying that they believe in “Unity in diversity”

We Sri Lankans have a lot to learn from India. The world’s largest democratic country with its large majority of Hindus has a Muslim as the head of the state and a Sikh, from a minority group with only 2% of India’s population, as the Prime Minister and another Sikh as the Commander of the Army. The holders of these high offices are much liked and highly respected by the Indians. Hon. Smt Sonia Gandhi, M.P. a Foreigner and a Catholic who is also held at high esteem is the Chairperson of the ruling United Progressive Alliance.

I have had a series of meetings in Sri Lanka and with expatriate Sri Lankans about the acceptability of the Indian Model. I found very many supporting my proposal. Most of them are very conscious of the fact that our art, culture, language and two main religions are of Indian origin. Our ancestors too came from India. Since we have many things in common a constitution like the one of India’s will help to solve our problem.

With all respect to the Indian Defence Minister Hon. Pranab Mukherjee, I defer from the views expressed by him to the Associated Press, recently in Singapore that “Sharing the same ethnic Group, we believe our active participation in the Peace process would complicate the issue instead of resolving it. But we stand fully behind the peace process”. The Hon. Minister’s views would have been correct before the Tamil Nad Assembly election held two months back. But today with the change of Government in Tamil Nad the whole scenario had changed. In my view, I hope you too will agree that the two strange coincidents that had taken place in India and Sri Lanka, have created a favourable atmosphere for both Governments to freely discuss and solve the problem easily. One of the two coincidents is that the main constituent partner of the United Progressive Alliance Government, the DMK has captured power in Tamil Nad. The Leader of the DMK, Dr. Kalaignar M.Karunanidhi has formed the Government in Tamil Nad with the Congress supporting him. This is a rare event and very relevant at the present juncture. The other coincident is that you, the President of Sri lanka is from the party that is in power today. If we do not solve our problems at this juncture with the support of a friendly Government in India which in turn is friendly with the State Government of Tamil Nad, we will never solve it.

That is why I am requesting you to offer the Indian model as a solution to the ethnic problem. It will be acceptable to the Tamils of Sri Lanka and on the basis of the discussions I had with various people, party leaders, religious dignitaries and many others I am convinced that there is popular support among the Sinhalese and Muslims as well. Everyone is opposed to a division of the country. Above all, out of the 28 states and 7 Union Terriories in the Indian Union, Tamil Nad state shows greate interest in the Tamils of Sri Lanka, being of the same ethnic group. The Indian model will be welcomed by the people and the Government of Tamil Nad and will also silence the Tamil Nad Politicians like Vaico, Nedumaran and Thirumavalavan who have no full knowledge of the ground situation. They have no moral right to demand for more powers for the regions in Sri Lanka than what they have in their own state of Tamil Nad.

With great reluctance I have to tell you that the Tamils, having faced various problems during the past 50 years and having lived under LTTE’s terrorist rule without any democratic and fundamental rights and with so many of their Human Rights violated and after long agitation for separation, will not be prepared to accept a solution within the frame work of a Unitary system under which no relief came for well over 50 years. The reluctance on the part of the Tamils to openly defy the LTTE is also due to uncertainity of the type of solution contemplated by the Government. They are prepared to give up their demand for separation. They are also prepared for a solution within a United Sri Lanka but as far as the structure of the constitution is concerned they will agree only for a Federal Solution. As a compromise the Tamils may be prepared to accept the Indian model which will be acceptable to majority of the Sinhalese and Muslims also. Everyday not less then 1500 Sri Lankans travel to India and they feel more homely in Tamil Nad, than in Sri Lanka where one is not sure to reach home after a days work.

In conclusion I wish to point out that being in Politics for a very long time only some of us know the hardships the Tamils underwent during the past 50 years, with the adoption of the Sinhala only Act in 1956. Starting from the obstruction of the Banda-Chelva pact up to now, it had been a tale of woe as far as the Tamils are concerned. For the first time in 50 years both the UNP and the SLFP, the two major Political Parties that take turns to rule the country, have offered a Federal Solution to solve the country’s ethnic problem, the former at the recent Presidential elections and the latter by passing a unanimous resolution at the last year’s annual convention of the Party. The leftist parties right through out, including during the Presidential election, had not changed their stand on a Federal Solution. For the second time in two years the LTTE had denied the rights of the Tamils to take part in the voting freely. Even you had said after the elections that all votes cast for the UNP candidate were not votes cast against you.

If you take all these facts into consideration your solution for our problem should be the Indian Model which will satisfy, those who are opposed to Federal and Unitary constitutions. The Tamils both in India and Sri Lanka will welcome it and the Indian Government being satisfied with the solution can be persuaded to openly take part in the peace process. Above all once a solution accepted as reasonable is offered and implemented, all the people can live in peace and happily. If the LTTE still resists in finding a solution they automatically get isolated.

With kind regards

Yours Sincerely,


V.Anandasangaree,
President - TULF

உங்கள் கொலைகளை நிறுத்துங்கள்

19-06-2006
திரு. சு.ப தமிழ்ச்செல்வன்
அரசியல் துறை பொறுப்பாளர்
தமிழீழ விடுதலைப் புலிகள்
கிளிநொச்சி.

அன்புள்ள தமிழ்ச்செல்வனுக்கு

உங்கள் கொலைகளை நிறுத்துங்கள்

சமாதானப் பேச்சுவார்த்தைக்கென நீர் ஒஸ்லோ சென்று நாடு திரும்பிய 24 மணி நேரத்துக்குள் கெப்பிட்டிக்கொலாவ என்னும் கிராமத்தில் கடந்த 15ம் திகதி கிளேமோர் கண்ணிவெடி மூலம், உமது போராளிகள் 65 அப்பாவி சிங்கள மக்களின் உயிரைக் குடித்ததுமல்லாமல் 70இற்கு மேற்பட்டோரை படுகாயமடையவும் செய்த இச் சம்பவத்தை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன். இவ் அவமானமான செயலுக்கு நீரே பொறுப்பேற்க வேண்டும். நீர் அதை மறுத்தாலும் எவரும் அதை ஏற்கப் போவதில்லை. சர்வதேச சமூகத்தினரால் மிகவும் உயர்ந்தவர்களாக கணிக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு இத்தகைய ஈனச் செயல்கள் அவமானத்தையே தேடித்தரும்.

உமது போராளிகள் உமது கட்டளைக்கமைய அல்லது நீர் அறிந்திருக்கத்தக்கதாக 700 போர் வீரர்களையும் ஏனைய சிப்பந்திகளையும் ஏற்றிச் சென்ற கடற்படை கப்பலை மூழ்கடிக்க முயற்சித்தமை மிக வருந்தக்கூடிய செயலே. அதே போன்று குழந்தைகள், பெண்கள் உட்பட 13 அப்பாவி பொது மக்களை கொலை செய்த சம்பவமும் வங்காலையில் இரு குழந்தைகள் உட்பட ஓர் குடும்பத்தையே கூண்டோடு அழித்தமையும் மிக்க வருந்தத்தக்கு செயலேயாகும். இவற்றையெல்லாம் யார் செய்கின்றார்கள் என்பதல்ல பிரச்சினை, இவை ஏன் நடக்கின்றன என்பதுதான் எனது கேள்வி. உங்களுடைய குற்றங்களை பிறர் மீது போடாதீர்கள். ஒவ்வொரு பொதுமகனையும் பாதுகாக்க வேண்டிய புனிதமான கடமை உங்களுடையதே. நீங்கள் அப்பாவி பொது மக்களின் மீது சிறிதேனும் மதிப்பு வைத்திருப்பீர்களேயானால் உங்களுடைய செயலால் ஒரு உயிரைத்தன்னும் இழக்க வேண்டிய நிலை ஏற்படாது. ஆனால் நீங்களோ சில போர் வீரர்களின் உயிரை எடுக்கின்ற அதேவேளை சில அப்பாவி மக்களின் உயிர்களையும் சேர்த்து எடுப்பதோடு அத்தகைய பொது மக்களின் மரணத்திற்கு வருத்தம் தெரிவிக்காது, அதே பிழையை மீண்டும் மீண்டும் செய்து வருகிறீர்கள். இராணுவத்தால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டால் கூரைமீது ஏறி நின்று கத்துகின்றீர்கள். தயவு செய்து ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் அத்தனையையும் பொருட்படுத்தாது விட இராணுவத்தினர் காந்தியவாதிகள் அல்ல. நீங்கள் இராணுவத்தினர் மீது மேற்கொள்ளும் தாக்குதல்களே இராணுவத்தினர் பதிலடி மேற்கொள்ள அவர்களை தூண்டுவதாக அமைகிறது. சகல கொலைகளையும் நான் வன்மையாக கண்டிப்பதோடு எச் சந்தர்ப்பத்திலும் எவரையேனும் கொலை செய்வதை நியாயப்படுத்த மாட்டேன். உங்களுடைய போராளிகளால் மேற்கொள்ளப்படும் கொலைகளை நிறுத்திவிட்டு பாருங்கள் அந்த நிமிடத்திலிருந்து சகல கொலைகளும் தானாகவே நிற்கும்.

நீங்கள் கொலை செய்ய எத்தனித்த இராணுவத்தினரே உமக்கும் உங்கள் தலைவர்களுக்கும் உங்கள் போராளிகளுக்கும் விமானநிலையம், கிழக்கு மாகாணம் போன்ற இடங்களுக்கு சென்று வர பாதுகாப்பு கொடுப்பவர்களாவர். இத்தகைய உங்கள் செயல்களுக்கும், சர்வதேச சமூகத்தால் ஏளனம் செய்யப்படும் நீங்கள் விடும் அறிக்கைகளுக்கும், உங்களுடைய தலைவரின் அங்கீகாரம் தரப்படுகின்றதா என்பதை அறிய ஆர்வமாக உள்ளேன். உங்கள் போராளிகள் திரு. வே. பிரபாகரன் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை என்ற எனது கூற்றையும் அவர்கள் தாமே சுதந்திரமாக முடிவுகள் எடுக்கின்றார்கள் என்ற எனது கூற்றையும் நீங்கள் உறுதிப்படுத்த முயற்சிக்கின்றீர்களா? உமது கூற்றுக்களில் அநேகமானவை உம்மிடம் இறுமாப்பு இருப்பதையும், பிறரை மதியாத தன்மையையும் எடுத்துக் காட்டுவதோடு நீங்கள் பேச்சுவார்த்தைக்கு வர தயாரில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. நீங்கள் யுத்தத்துக்கு தயார் என அடிக்கடி அறைகூவல்விடுவது, ஓநாய், ஓநாய் என அடிக்கடி கூச்சலிட்டு மக்களை ஏமாற்றி இறுதியில் தன் மந்தைக்கூட்டத்தையே இழந்த இடையச் சிறுவனின் கதைதான் எனக்கு ஞாபகம் வருகிறது. உங்களுடைய உள்ளுர் தலைவர்கள் சிலரும் உங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சில பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த ராகத்தையே பாடுகின்றனர். அவர்கள் மௌனமாக இருப்பார்களேயானால் அவர்களுக்கும் நம் எல்லோருக்கும் நல்லது. உங்களுடைய இயக்கத்தை போன்ற ஒன்று முழு உலகையும் ஆத்திரமூட்டிவிட்டு ஒரு யுத்தத்தை வெல்லலாம் என கனவு காணாதீர்கள். ஏனையவர்களை போன்று தமிழ் மக்களும் யுத்தத்தை விரும்பவில்லை. அவர்கள் உங்களுடைய மக்கள் அல்ல. தயவு செய்து அவர்களை “எம் மக்கள்” என்று கூறுவதை நிறுத்துங்கள்.

உங்களுடைய திட்டத்தை நாடு நன்கறியும். சர்வதேச சமூகமும் அவ்வாறே. ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்த சிங்கள மக்களை தூண்டக்கூடிய செயல்களில் உங்களுடைய போராளிகளை செயற்பட வைத்துள்ளீர்கள். இம் முயற்சியில் நீங்கள் இதுவரை வெற்றியடையவில்லை. திருகோணமலையில் ஆரம்பித்து பிற இடங்களுக்கு பரவும் என கருதி இனக்கலவரத்தை தூண்ட நீங்கள் எடுத்த முயற்சி உங்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கும். நடந்தவை அத்தனையும் திருகோணமலை மாவட்டத்துக்குள்ளேயே அடங்கிவிட்டது. புதுவருடத்திற்கு முதல்நாள் “வருஷ சந்தைக்கு” சிங்கள, ஆண் பெண் பிள்ளைகள் அச் சந்தையில் பொருட்களை வாங்க கூடுவார்கள் எனத் தெரிந்திருந்தும் பொது அறிவு சொற்பமேனும் அற்ற ஒருவர் குண்டை வெடிக்க வைப்பாரா?. அக் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் மிகக் கேவலமானவை. இது உங்களுடைய போராளிகளால் சிங்கள மக்களை தூண்டிவிடுவதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகும். இச் செயலை அவர்கள் தாமாக செய்தார்களோ அல்லது உமது கட்டளைக்கு அமைய செய்தார்களோ நான் அறியேன். ஆனால் இச் சம்பவத்தில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் பலர் உயிரிழந்ததோடு இந்த முட்டாள் செயலால் எரிக்கப்பட்டும், சூறையாடப்பட்டதுமான தமிழர்களின் சொத்து பலகோடி பெறுமதியானதாகும். தம் சொந்த வீட்டை விட்டு தெற்கே சிங்கள, இஸ்லாமிய மக்களோடு மிக அமைதியாக வாழும் பல இலட்சம் தமிழ் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கோடு செய்யப்பட்ட பொறுப்பற்ற இச் செயலுக்கு நீரே பொறுப்பேற்க வேண்டும். அதிஷ்டவசமாக உங்களுடைய துர் நோக்கத்தை மக்கள் அறிந்தமையால் திருகோணமலை தவிர்த்து ஏனைய பகுதிகளில் அமைதி நிலவியது. உங்களால் 65 பேர் கொல்லப்பட்ட சம்பவமும் சிங்கள மக்களை தூண்டிவிட்டு ஓர் இனக்கலவரத்தை ஏற்படுத்த எடுத்த முயற்சியாகும். மீண்டும் சிங்கள் மக்கள் உங்கள் சதியை வெற்றிகரமாக முறியடித்து விட்டார்கள். நான் வன்முறையை வன்மையாக கண்டிப்பவன் என்பதையும் எக் கொலை யாரால் செய்யப்பட்டாலும் அதை மூடி மறைப்பவனும் அல்ல என்பதையும் தயவு செய்து உணர்ந்து கொள்ளுங்கள். எச் சந்தர்பத்திலும் இன்னொருவரின் உயிரை எடுக்கின்ற உரிமை யாருக்கும் கிடையாது. சில குற்ற நடவடிக்கைகளுக்கு சில முன்னணி அமைப்புக்கள் தான் காரணம் என்று நீங்கள் கூறுவது பெரிய பகிடியாகும். இத்தகைய முன்னணி அமைப்புக்கள் அத்தனையும் உங்கள் போராளிகளால் நடாத்தப்படும் போலியான அமைப்புக்கள் என்பதை தயவு செய்து ஒத்துக்கொள்ளுங்கள். பொதுமக்கள்தான் கிளேமோர்களை வெடிக்க வைக்கின்றார்கள் என்ற தங்களுடைய கூற்றை சர்வதேச சமூகம் கிண்டல்செய்தமையை ஞாபகமூட்ட விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்கள் அநேகமாக இராணுவத்தை அல்லது கடற்படையை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல அப்பாவி மக்களுமே. இராணுவத்தினரின் பதிலடியால் அப்பாவிகளின் உயிரிழப்பிற்கும் நீரே பொறுப்பேற்க வேண்டும். தற்பாதுகாப்புக்கென பல்கலைகழக மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதாக கூறுகின்றீர்கள். யாரிடமிருந்து பாதுகாக்க? நீங்கள் அவர்களை உங்களுடைய போராளிகளுடன் கலக்க வைத்து அப் போராளிகள் சில குற்றங்களை புரிந்துவிட்டு தப்பி செல்கின்ற வேளையில் அப்பாவி மாணவர்களே கொலை செய்யப்படுகின்றார்கள். முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு கட்டாய பயிற்சி அளித்தீர்கள். அவர்களை உங்களுடைய போராளிகளுடன் கலக்க வைத்து போராளிகள் குற்றங்களை செய்து விட்டு தப்பிக்கும் வேளையில் அப்பாவி பொது மக்களே இராணுவத்தினரிடம் மாட்டிக் கொள்கின்றனர். கைக்குண்டு வீசி ஒரு இராணுவ வீரரை கொன்று சிலரை காயப்படுத்திய சம்பவம் ஒன்று மாணவர் ஒன்றியத்தினரால் மேற்கொள்ளப்பட்டது என கூறப்பட்டதை நான் நம்பமாட்டேன். மாணவர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபடுவதில்லை. ஆனால் நீங்கள் அவ்வாறு கூறின் அத்தகைய மாணவர்களுடைய இறப்பிற்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டும்.

பல சந்தர்ப்பங்களில் சர்வதேச சமூகத்தை நீங்கள் ஏமாற்ற முடியாது எனக் கூறிவந்துள்ளேன். உங்களுடைய நடவடிக்கைகள் அத்தனையையும் அறிந்தவர்களாதலால் உங்களால் அவிழ்த்து விடப்படும் புளுகு மூட்டைகளை அவர்கள் நம்பத் தயாரில்லை. தினமும் தவறாது கைக்குண்டு வீச்சு மூலமோ, அல்லது கிளேமோர் கண்ணிவெடி மூலமோ, அல்லது உங்களுடைய பிஸ்டல் குழு மூலமோ நீங்கள் இராணுவத்தினரை கொன்று வருகின்றீர்கள். உங்களுடைய செயல்களால் சில அப்பாவி மக்களும் கொல்லப்படுகின்றார்கள். இருப்பினும் உங்கள் ஈடுபாட்டை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து இராணுவத்தை குற்றம் கூறி வருகின்றீர்கள். நீங்கள் கொலைகளை முதலில் நிறுத்துங்கள். ஏனைய கொலைகள் நாடு பூராகவும் தானாகவே நிற்கும். தொடர்ந்து பணி புறக்கணிப்பை நடத்த வேண்டுமென்று கூறிய மூளைசாலி யார்? உங்களுடைய கொலைகளுக்கும் விடுதலை கொடுத்திருக்கலாமே. இச் செயலால் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதையும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோன்றும் மாணவர்கள் எவ்வளவு அசௌகரியப்பட்டார்கள் என்பதையும் நீங்கள் அறியமாட்டீர்கள்.

உங்களுடைய இலக்கை அடைய நீங்கள் தவறிவிட்ட காரணத்தால் உங்களுடைய பிரபலமான நடவடிக்கைகள் எல்லாவற்றையும் நிறுத்தி தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள். நீங்கள் தமிழ் மக்களை, இளைஞர்களையும், குறிப்பாக மாணவர்களையும், அரசையும், நோர்வே அனுசரணையாளர்கள் உட்பட சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றி விட்டீர்கள்.

நீங்கள் எமது இல்லங்களை, எமது சுகாதாரத்தை, எமது இளைஞர்களை, எமது பிள்ளைகளின் படிப்பை, எமது கலாச்சாரத்தை, அத்தோடு நாம் பேணி காத்த நாகரீகத்தையும் அழித்துவிட்டீர்கள். உங்களால் நாம் எல்லோரும் ஓட்டாண்டி ஆக்கப்பட்டோம். எமது ஜனநாயக, அடிப்படை உரிமைகளை பறித்தெடுத்து விட்டீர்கள். அத்தோடு எமது மனித உரிமைகள் பலவற்றை மீறிவிட்டீர்கள். இப்போது சர்வாதிகார ஆட்சியை நிறுவ முயற்சிக்கின்றீர்கள். தயவு செய்து மூட்டை முடிச்சுக்களுடனும், உங்கள் குடும்பத்தினருடனும் பிற நாடுகளில் திறமையான கல்வி வசதி பெற்று வாழும் உங்கள் பிள்ளைகளுடன் போய் சேருங்கள். தமிழ் மக்களை அவர்கள் இஷ்டப்படி விட்டுவிட்டால் தம் வேலைகளை தாங்களே பார்த்துக் கொள்;வார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு தேவைப்படின் சர்வதேச சமூகம் அக்கடமையைச் செய்யும். ஆனால் அவர்களுக்கு இன்று தேவைப்படுவது எல்லாம் உங்கள் போராளிகளிடமிருந்து பாதுகாப்பே. ஆகையினால்தான் சிங்கள, முஸ்லீம் மக்களுடன் சேர்ந்து வாழுவதற்காக தெற்கே இடம் பெயர்ந்து சென்றுள்ளனர். தமிழ் நாட்டுக்கு தப்பிச் செல்லும் மக்கள் உங்;கள் கட்டுப்பாட்டின் கீழ் உங்களுடைய அடக்குமுறையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே.

இறுதியாக எங்களுடைய இளைஞர்களை இனியேனும் விட்டு வையுங்கள். தினமும் நீங்கள் சிங்கள போர்வீரர்களின் உயிர்களையும், பொது மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்க்கின்ற பொலிஸ்காரர்களையும் மட்டும் கொல்லவில்லை அப்பாவி தமிழ், சிங்கள, முஸ்லீம்களையும் கொல்கின்றீர்கள். எமது இளைஞர்களை பல்வேறு ஆபத்தான செயல்களில் ஈடுபடுமாறு பல்வேறு இடங்களுக்கு அனுப்பி அவர்களை பலி கொடுக்கின்றீர்கள். இத்தகைய பணிகளுக்கு உங்களுடைய பிள்ளைகளை அனுப்புங்கள் என்று நான் கூறவரவில்லை. ஏனெனில் உங்களுக்கு அவர்கள் அருமையானவர்கள். நான் உங்களிடம் வேண்டுவது ஒன்றை மட்டுமே. அப்பாவி ஏழைப் பெற்றோரின் பிள்ளைகளை மேலும் பலி கொடுக்காது உங்களுடைய பிள்ளைகளை போன்று கல்வி கற்க விடுங்கள்.

நன்றி

இப்படிக்கு


வீ.ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

ACT - MOST BRUTAL

ACT - MOST BRUTAL

I strongly condem the massacre of 65 innocent civilians in the most barbarics manner at Kepitigollawa by a clay-more attack. I express my deepest sympathies to the Members of the victims’ families. I find no words to express my grief at this great loss. I wonder how these people could make up their minds to commit these heinous crimes, after sending their own wives and children abroad for higher education. There is no doubt that it is the work of the LTTE, although they had disowned liability for this incident. For the two clay-more attacks on the same day in Jaffna they my put the blame on the “Infuriated” civilians who are God fearing and law abiding citizens.

Their most recent advicers in Oslo were Mr. Siva Pasupathy one time Attorney General of Sri Lanka and Mr. V. Uruthira Kumar a Lawyer based in America and a son of an Ex. Mayor of Jaffna of the TULF. I do not for a moment suggest that this clay-more mine attack took place on their advice. My question is what business has a bramin, a total vegetarian, in a butchery. Both the countries Australia and America, where these gentleman are living happily, with their kin and kith and playing cricket with their grand children, had banned the LTTE in their territories. I am not suggesting anything to these two countries that I respect for many reasons including the proscription of the LTTE in their countries. Can these two gentlemen be permitted to bring dishonour to the countries that had trusted them and conferred citizenship on them. A Malaysian Tamil Professor I understand had been requested to resign from his Professorship of the University where he was serving, as penalty for going abroad to advice the LTTE earlier.

The LTTE’s intensions are obvious. They are all out to provoke the Sinhalese by this type of horrid activities, to start a communal riots, through which they think that they can win back the sympathy of the International Community. It was the LTTE that was responsible for riots of July, 1983 in which most well to do Tamils became paupers. Thousands of Tamils were killed and billions worth of their property looted or destroyed. However the lives of hundreds of thousands of Tamils were saved by the Sinhalese. The local hoodlums were mainly responsible for this unfortunate riots. The International Community is now aware of the LTTE’s tactics and cannot be hoodwinked by them. The Sinhalese too know about this and inspite of several attempts of the LTTE to provoke a communal riots, the Sinhalese did not retaliate. Thousands of Tamils had left their native places and had moved to the South to live with the Sinhalese where they feel free and more secured, and also enjoy all rights like the Sinhalese.

Everyone in this country whether they are Sinhalese, Tamils, Muslims or of any other ethnic group should consider themselves as one in the family of the victims, feel for what had happened and be alert to prevent a similar incident taking place in any part of the country. I join H.E the President in his appeal to the people to act with calm and restraint at this critical juncture. I wish to add that we, whichever ethnic groups we may belong to should treat ourselves as children of the same family feeling for each other and sharing each others grief.


V. Anandasangaree
President-TULF